சிதறடிக்கப்படும் புத்தளம் மாவட்ட சிறுபான்மை வாக்குகளும், அடுத்த 05 வருடங்களுக்கு பொறுப்பு கூறப்போகும் தோல்வியுற்ற தலைமை வேட்பாளர்களும்.
புத்தளம் சிறுபான்மை வாக்குகள் இம்முறை சிதறி சின்னாபின்னம் ஆகிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள்.
எமது புத்தளம் மாவட்டத்தில் சிதறடிக்கப்படும் வாக்குகள்.
பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் சாத்தியமுள்ள கட்சிகள்.
1. NPP எனும் அநுர குமராவின் திசைகாட்டி
2. SJB எனும் சஜித் பிரேமதாசாவின் தொலைபேசி
3. NDF எனும் ரணில் விசக்ரமசிங்கவின் கேஸ் சிலிண்டர்
5% வெட்டுப்புள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் சாத்தியமற்ற கட்சிகள்.
4. UNA எனும் அலி சப்ரி ரஹீம் போட்டியிடும் தராசு
5. NFGG எனும் இஷாம் மரிக்கார் போட்டியிடும் இரட்டை கொடி
6. UDV எனும் எஹியா அவர்கள் போட்டியிடும் மைக்.
இந்த 06 கட்சிகளுக்கும் எமது சிறுபான்மை வாக்குகள் சிதறடிக்கப்பட்டு எமக்கான பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்குமா? என்ற சந்தேகம் எமது புத்தளம் அரசியல் ஆய்வாளர்களுக்கு மத்தியில் இப்பொழுதே பேசப்படுகின்றது.
அவ்வாறு நாம் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் பெற்றுக்கொள்ள தவறினால்....
அடுத்த 05 வருடங்களுக்கு எமது சிறுபான்மை மக்களின் தேவைகள், பிரச்சினைகள், அனர்த்தங்கள், பாதுகாப்பு பிரச்சினைகள் போன்ற அவசர அவசிய விடயங்களுக்கு நாம் மீண்டும் யாரிடம் செல்வது?
இவர்களின் பதில் என்னவாக இருக்கும்?
1. NPP எனும் அநுர குமராவின் திசைகாட்டி
NPP யிலுள்ள சிறுபான்மை வேட்பாளர் தோற்றுப்போனால் புத்தளம் சிறுபான்மை சமூகம் மீண்டும் வென்னப்புவைக்கும், நாத்தாண்டிக்கும், சிலாவத்துக்கும், பெரும்பான்மை MP மாரை தேடி Appointment எடுத்து அலைந்து திரிய நேரிடுமா? எமக்கு பொறுப்பு கூறும் தலைமை யார்?
2. SJB எனும் சஜித் பிரேமதாசாவின் தொலைபேசி
SJB யிலுள்ள சிறுபான்மை வேட்பாளர்கள் தோற்றுப்போனால் முன்னைய காலங்களை போன்று ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹகீம் போன்றோர் இந்த சமூகத்துக்கு அவர்களால் முடியுமான உதவிகளை தொடர்ந்தும் செய்வார்களென்ற எடுகோளில் செயல்படுவதா?
3. NDF எனும் ரணில் விசக்ரமசிங்கவின் கேஸ் சிலிண்டர்
இதில் யார் சிறுபான்மை வேட்பாளர் என்றே தெரியவில்லை. பொறுப்பு கூறும் மாவட்ட தலைமை யார்?
4. UNA எனும் அலி சப்ரி ரஹீம் போட்டியிடும் தராசு
அலி சப்ரி ரஹீம் தோற்றுப்போனால் அடுத்த 05 வருடத்துக்கு உங்களால் இந்த சமூகத்துக்கு எவ்வாறான உதவிகளை செய்து தர முடியும்?
எமது சிறுபான்மை மக்களின் தேவைகள், பிரச்சினைகள், அனர்த்தங்கள், பாதுகாப்பு பிரச்சினைகள் போன்ற அவசர அவசிய விடயங்களில் நீங்கள் எவ்வாறு பொறுப்பு கூறுவீர்கள்.
5. NFGG எனும் இஷாம் மரிக்கார் போட்டியிடும் இரட்டை கொடி
இஷாம் மரிக்கார் தோற்றுப்போனால் அடுத்த 05 வருடத்துக்கு உங்களால் இந்த சமூகத்துக்கு எவ்வாறான உதவிகளை செய்து தர முடியும்?
எமது சிறுபான்மை மக்களின் தேவைகள், பிரச்சினைகள், அனர்த்தங்கள், பாதுகாப்பு பிரச்சினைகள் போன்ற அவசர அவசிய விடயங்களில் நீங்கள் எவ்வாறு பொறுப்பு கூறுவீர்கள்.
6. UDV எனும் எஹியா அவர்கள் போட்டியிடும் மைக்.
எஹியா தோற்றுப்போனால் முன்னைய காலங்கள் போன்று அடுத்த 05 வருடங்கள் உங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டுமா? அல்லது உங்களின் பொறுப்பு கூறல் எவ்வாறு அமையும்?
இவர்களிடம் விடை கிடைக்குமா? அல்லது மக்கள் சிந்தித்து விடையளிக்குமா?
எம்.எச்.எம் ரஸ்மி
முன்னாள் நகர சபை உறுப்பினர்
புத்தளம்
No comments