Breaking News

சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் நடாத்தவுள்ள வருடாந்த மீலாத் போட்டிக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்ட்டுள்ளன.

எம்.யூ.எம்.சனூன்

கொழும்பு சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் நடாத்தவுள்ள வருடாந்த மீலாத் போட்டிக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகள், அஹதிய்யா மற்றும் மத்ரஸாக்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.


போட்டிகள் யாவும் நவம்பர் 9 ம் திகதி சனிக்கிழமை தெமட்டகொட "பாஷா வில்லா" மற்றும் வெள்ளவத்தை  லில்லி அவென்யூ சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஆகியவற்றில் இடம்பெறவுள்ளன.


இதற்கான பரிசளிப்பு விழா நவம்பர் மாதம் 23 ம் திகதி  சனிக்கிழமை நடைபெறும். 


இதற்கான அனுமதி அட்டைகள் இது வரையிலும் கிடைக்கப் பெறாதவர்கள்  எந்த நேரத்திலும் 0773578986 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு தஃவா மற்றும் மத விவகார குழுவின் தவிசாளர் சித்தீக் முஹம்மது ஷாஸ்லி தெரிவித்தார்.






No comments