Breaking News

கற்பிட்டி நிர்மலமாதா சிங்கள பாடசாலையின் மலித் தருஷன் வரலாற்றுச் சாதனை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - அரபாத் பஹர்தீன், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான 18 வயதிற்குட்பட்ட 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கற்பிட்டி நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலய மாணவன் மலித் தருஷன் முதலிடம் பிடித்து பாடசாலை வரலாறில் சாதனை படைத்தார்.


கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அனுசரணையில் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகள் இன்று (19) கொழும்பு சுகததாச சர்வதேச விளையாட்டரங்கில்  இடம்பெற்று வருகின்றது. 


 சனிக்கிழமை (19) இடம்பெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் குறுந்தூர  ஓட்டப் போட்டியில் வடமேல் மாகாணத்தின் சம்பியனான கற்பிட்டி நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலய மாணவன் டபில்யூ. சீ. டீ. மலித் தருஷன் இறுதிப் போட்டியில் போட்டித் தூரத்தை 10.96 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பெற்றதுடன், தனது அதி சிறந்த நேரப் பெறுபேற்றையும் நிலைநிறுத்தி வரலாறு படைத்தார்.


கற்பிட்டி நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக மெய்வல்லுனர் போட்டியில் தேசிய மட்டத்தில்  முதலிடம் பெற்றமை இதுவே முதல் முறை எனவும் இவ் வெற்றிக்கு துணை நின்ற அப்பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை எச்.பி.கே. ராஜபக்ஷ மற்றும்  பெற்றோருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக பாடசாலையின் அதிபர் சுதர்சன    தமது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.







No comments