ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஐதுறுஸ் மொஹமட் இல்யாஸ் அவர்கள் காலமானார்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
புத்தளத்தின் மூத்த அரசியல்வாதியும் 2024 ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஐதுறுஸ் மொஹமட் இல்யாஸ் வியாழக்கிழமை (22) புத்தளம் வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
புத்தளத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் மூத்த அரசியல்வாதியான இவர் கடந்த மூன்று தினங்களாக புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.



No comments