JobVibe.lk - Sri Lanka Job Portal

நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

வலய மட்ட தமிழ் மொழித் தின போட்டிகளில் பங்குபற்றி மாகாண மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் மலர் மாலை மற்றும் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். 


இந்த கௌரவிப்பு நிகழ்வு அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் தலைமையில் திங்கட்கிழமை (05) பாடசாலையில் நடைபெற்ற காலைக்கூட்டத்தின் போது இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி மற்றும் உப அதிர்கள், மாணவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


மாகாண மட்ட தமிழ் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் :


தமிழ் அறிவு வினா விடை முதலாம் இடம் எஸ்.எச்.அன்ஹா மர்யம், ஆர்.எப்.ரிஸ்னாத், எம்.பீ.சப்ரா, ஜே.எப்.ஜஸ்னா, எஸ்.கவிஷா.


எழுத்தாக்கம் முதலாம் இடம் எம்.எஸ்.ஹயா.


பேச்சு ( பிரிவு 02)

இரண்டாம் இடம் எம்.எப்.

அதா ஹானி


இலக்கிய விமர்சனம் 

மூன்றாம் இடம் ஜே.எப்.ஜஸ்னா.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال