முன்னாள் கற்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளருக்கு பிரியாவிடை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி கோட்டக் கல்விக் காரியாலயத்தின் கல்விப் பணிப்பாளராக கடந்த 09 வருடங்கள் கடமையாற்றி தற்போது புத்தளத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள முன்னாள் கற்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளர் திருமதி என்.எம்.ஆர். தீப்தி பெர்னாண்டோவிற்கான பிரியாவிடை வைபவம் புதன்கிழமை (28) கற்பிட்டியின் புதிய கோட்டக் கல்விக் காரியாலயத்தின் கல்விப் பணிப்பாளர் ஏ.எம் ஜவாத் தலைமையில் இடம்பெற்றது.
கற்பிட்டி கோட்ட கல்விக் காரியாலயத்தில் ஆசிரிய ஆலோசகர்களால் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை வைபவத்தில் வாழ்த்தி கௌரவிக்கப்பட்ட முன்னாள் கற்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் தீப்தி பெர்ணான்டோ தற்போது புத்தளம் கல்விப் பணிமனையின் திட்டமிடல் பிரிவிற்கு பிரதி கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments