JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து காரியாலயம் திறந்து வைப்பு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் , கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக புத்தளம் மஸ்ஜித் வீதியில் புதிய காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


புத்தளம் மஸ்ஜித் வீதியில், சமூக சேவையாளரும், ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பவருமான எம்.என்.எம்.நுஸ்கியின் இல்லத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிக்கும் காரியாலயம் திங்கட்கிழமை (26) திறந்து வைக்கப்பட்டுள்ளது.


காரியாலய திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் மாகாண அமைச்சருமான அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி,  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பிரத்தியேகச் செயலாளர் ஜௌசி ஜமால்தின், ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் ஜேசுதாசன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வெற்றிக்காக உழைக்கும் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال