JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - புழுதிவயல் பைஸானா பைரூஸ் எழுதிய டுவன்டி பிளஸ் 20+ கவிதை நூல் வெளியீட்டு விழா!.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம். யூ.எம் சனூன்)

புத்தளம் புழுதிவயல் பைஸானா பைறூஸ் இன் கன்னி வெளியீடாக வெளிவந்துள்ள டுவன்டி  ப்ளஸ் 20+ கவிதை நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை (28) பிற்பகல் 2 மணிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம் பாஸில் தலைமையில் இடம்பெற உள்ளது.


இந் நூல் வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் யு.எல் அப்துல் மஜீத் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.


இந் நிகழ்விற்கான ஏற்பாடுகளை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் தமிழ் சங்கம் மற்றும் சமூகவியல் சங்கம் என்பன மேற்கொண்டுள்ள மையும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال