தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரைக்கார் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சர்வமத தலைவர்களுக்கிடையிலான (DIRC) சந்திப்பு
சென்ற வாரம் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரைக்கார் புத்தளம் மாவட்டத்தின் சர்வமத தலைவர்களை (DIRC) சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் சர்வமத குழுவினால் முன்னடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்படுகின்ற, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்போகின்ற பல முக்கிய விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன், தூய தேசத்திற்கான இயக்கத்தின் (Clean Nation) நோக்கம் மற்றும் அதன் பயணம் சம்மந்தமாகவும் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.
மேலும் எங்களுடைய மாவட்டத்தின் சர்வமத குழு (DIRC) சமூகமயப்படுத்தப்பட வேண்டும் என்றும் இது காலத்தின் கட்டாயம் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தியதோடு அதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளும் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
முக்கயமாக இந்த மாவட்டத்தில் மூவின மக்களை ஒற்றுமைப்படுத்தவும் நடுநிலையான முடிவுகளை எடுக்க வேண்டியமை குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன். கடந்த கால மற்றும் எதிர்கால அரசியல் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பின் மூலமாக எங்களுடைய உறவு வலுவடைந்ததுடன் அவர்கள் முன்னெடுக்கும் நல்ல பல திட்டங்களுக்கு தூய தேசத்திற்கான இயக்கத்தின் (Clean Nation) பங்களிப்பை வழங்குவதற்கான முடிவுகளும் எடுக்கப்பட்டது.
No comments