அதிகாரிகள் கௌரவிப்பு சங்க பதிவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ். புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஜனாதிபதி மாவத்தையில் உள்ள சூரிய பெண்கள் அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச அதிகாரிகள் கௌரவிப்பு மற்றும் சங்கத்தின் பதிவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (01) கிராம சக்தி கட்டிடத்தில் சங்கத்தின் தலைவி எம்.எஸ் ஹசீனா தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலாளர் அழைக்கப்பட்டிருந்தும் அலுவல பணி காரணமாக அவர் சமூகமளிக்கவில்லை அவர் சார்பாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கிராமத்திற்கான அபிவிருத்தி சங்கங்கள் எதுவும் இதுவரை காலமும் பதிவு செய்யப்படவில்லை எனவும் முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட சூரிய பெண்கள் அபிவிருத்தி சங்கத்தின் மூலம் குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லலாம் என்ற நம்பிக்கை தமக்கு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் நிர்வாகக் குழுவினர். தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தரால் சங்கத்தின் பதிவுச் சான்றிதழ் நிர்வாகக் குழுவினரிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிகாரிகளுக்கு அவர்களின் மக்கள் சேவையை பாராட்டும் முகமாக சங்கத்தினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments