Breaking News

அதிபர் ஏ.எம். ஜவாத்  இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, எஸ்.ஆர்.எம்.முஹ்சி அதிபராக நியமனம்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

கற்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பட்டதாரியும், புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபருமான ஏ.எம். ஜவாத் இலங்கை கல்வி நிவாக சேவைக்குள் (SLEAS) உள்வாங்கப்பட்டுள்ளார்.


1990 இல் ஆசிரியராக நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நியமனம் பெற்ற ஏ.எம். ஜவாத் புத்தளம் இந்து மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும், கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம், புத்தளம் அசன் குத்தூஸ் வித்தியாலயம், கல்கமுவ முன்னோடி முஸ்லிம் மகா வித்தியாலயம் என்பவற்றின் அதிபராகவும் கல்விப்  பணியாற்றியுள்ளார்.


தனது கல்விப்பயணத்தில் 34 வருடங்களும் 06 மாதங்களும் கல்விப்பணியாற்றியுள்ள ஏ.எம். ஜவாத் அவர்களது இச்சேவை மாற்றம் வடமேல் மாகாணத்தின் குறிப்பாக தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு உந்துசக்தியாக அமைய வேண்டும் என கல்வியியலாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 


இதே வேளை புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபராக எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி (SLPS) நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி, ஜாமிஆ நளீமிய்யா ஆகியவற்றின் பழைய மாணவரும், பேராதனை பல்கலைகத்தின்  பட்டதாரியும் ஆவார்.


இவர் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் ஆசிரியராகவும், உதவி அதிபராகவும், பிரதி அதிபராகவும்  சிறந்த முறையில் கடமையாற்றியவர்.


கடந்த காலங்களில் சமூர்த்தி முகாமையாளராகவும், நகர சபை உறுப்பினராகவும் சேவையாற்றி அனுபவம் பெற்றவர்.


அத்தோடு பல சமூக சேவை நிறுவனங்கள் மூலம் பொது அமைப்புக்களுக்கும், புத்தளம் பிரதேச பாடசாலைகளுக்கும் பல்வேறு உதவிகளையும் வழங்கியவர்.





No comments

note