Breaking News

புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட மீனவ தொழிற் சங்க கிளை

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம். யூ. எம் சனூன்)

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தில் 2018 ல் மீனவ தொழிற் சங்கம் பதியப்பட்டு இருந்த நிலையில் புத்தளம் மாவட்டத்திற்கான கிளை ஒன்று காணப்படவில்லை. இதன் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை (27)  தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ஜே.பத்மநாதன் தலைமையில் செயற்பாட்டாளர் ஜனாப் இஜாஜ் இன் பங்குபற்றுதலுடன் புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் அம்மாதோட்டம், உசுலன் தீவு உப மீனவ கிராமத்தில் புத்தளம் மாவட்ட மீனவ தொழிற் சங்க கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதன்போது உரையாற்றிய மாவட்ட இணைப்பாளர் ஜே.பத்மநாதன்;

மீனவர்கள் தம்மை அடையாளப்படுத்துவதற்கு இதுவரை காலமும் அரசினால் அறிமுகப்படுந்தப்பட்ட கிராமிய அமைப்புக்கள் மற்றும் மீன்பிடி கூட்டுறவு அமைப்புக்கள் என்பன ஊடாகவே மீனவர்கள் தமது பிரச்சினைகளை  சுட்டிக்காட்டியும் அரச உதவிகளை பெற்றும் வந்துள்ளனர். எனினும் பொதுப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது. இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்படி மாவட்ட தொழிற் சங்க கிளையின் ஊடாக மீனவர்கள் தமது பிரச்சினைகளை சுதந்திரமாக வெளியிடுவதுடன் தமது பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய ரீதியில் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேட முடியும் எனவும் உதாரணமாக தற்போது பிரகடணப்படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ள புதிய மீனவச் சட்டத்தில் பல விடயங்கள் சிறு மீனவர்கள் உட்பட ஆள் கடல் மீனவர்கள் என சகலரையும் பாதிக்கக் கூடிய விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் சமூக நிறுவனங்கள் கூறி வருகின்றன. அவைகளுக்கு எதிராகவும் சுதந்திரமாகவும் நடவடிக்கைகளை மீனவர்கள் மேற்கொள்ள இம் மாவட்ட தொழிற் சங்கம் பெறும் உதவியாக அமையும் எனவும் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து கிராமிய மீனவ சங்கத்தின் தலைவர் சாந்தன் ஜூட், மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர் ரகுநாதன் மற்றும் எம்.எச்.எம் றிஸ்வான் ஆகியோரும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.


அதனைத் தொடர்ந்து புத்தளம் மாவட்ட மீனவ தொழிற் சங்கத்திற்கான  நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது.


தலைவராக ; சாந்தன் ஜூட், செயலாளராக ரகுநாதன், பொருளாளராக எம்.எச்.எம் றிஸ்வான் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








No comments

note