கடையாமோட்டை பாடசாலையில் இடம்பெற்ற மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!.
புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (08) பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உப அதிபர், உட்பட பாடசாலை சகல ஆசிரியரகளும் கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கு சின்னம் அணிவித்தனர்.
இந்நிகழ்வு பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான பொறுபாசிரியர் எம். பைஸல் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments