புத்தளம் ஹல்லம் சிடி கம்பஸ் மாணவர்கள் தமக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புத்தளம் ஹல்லம் சிடி கம்பஸில் ஆங்கில மொழி மூலம் கற்று AAT Sri Lanka நிறுவனத்தின் தமது கற்கையை பூர்த்தி செய்த மாணவர்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
AAT கற்கையின் மூன்று மட்டங்களையும் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (03) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை ஹட்ச் (Hutch Sri Lanka) நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரியும், முன்னாள் AAT Sri Lanka நிறுவனத்தின் தலைவருமான லலித் பெர்னாண்டோ உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் போதே புத்தளம் ஹல்லம் சிடி கம்பஸ் மாணவர்கள் தமக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
நாடளாவிய ரீதியில் இக்கற்கை நெறியை பூர்த்தி செய்த 1000 இற்கும் அதிகமான மாணவர்கள் தம் பெற்றோர் சகிதம் கலந்துக்கொண்டு சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
புத்தளம் ஹல்லம் சிடி கம்பஸ் மாணவர்களான எஸ்.ஏ. சாரா, எம்.எம். ஹம்தி, எம்.மஹ்சன், என்.எம்.அஸா, எம். அக்மல், எம்.ஏ.எம். ஆதில் ஆகியோரே சான்றிதழ்களை பெற்றுக் கொண்டவர்கள் ஆவர்.
No comments