அலி சப்ரி ரஹீம் எம்.பி மூலமாக முஸல்பிட்டி கிராமத்திற்கு அதிர்ஷ்டம்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
இளம் விவசாய தொழில் முனைவோர் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் முஸல்பிட்டி கிராமம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கருத்திட்டத்த அடிப்படையில் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் சிபாரிசினால் இக்கிராமம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும், மக்கள் பங்கேற்புடனான மதிப்பீடும் வியாழக்கிழமை (05) முஸல்பிட்டி கிராம சேவையாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கலந்து சிறப்பித்தார்.
கல்பிட்டி பிரதேச செயலாளர், திட்டமிடல் அதிகாரிகள், விவசாய திணைக்கள அதிகாரிகள், கிராம சேவை அதிகாரிகள் உட்பட பல அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன் பாராளுமன்ற உறுப்பினரின் முஸல்பிட்டி இணைப்பாளர் அன்வர் சதாத் மௌலவி அவர்களும், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், ஊடக செயலாளர் எம்.எம்.நௌபர் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செயற்திட்டத்திற்கு இணைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் முஸல்பிட்டி இணைப்பாளர் அன்வர் சதாத் மௌலவி, வட்டார இணைப்பாளர் பீ.எம். மூசின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
No comments