Breaking News

கற்பிட்டி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான பிரதேச முயற்சியாண்மை மகளீர் பற்றிய கலந்துரையாடல்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சிறு மற்றும் நடுத்தர  மகளீர் முயற்சியாண்மை உடையவர்கள் தெரிவு செய்து வியாபாரத் துறையை மேம்படுத்தும் வேலைத்திட்டம் சம்மந்தமான கலந்துரையாடல் இன்று (02) கற்பிட்டி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல் நிசாந்த் தேசப்பிரிய  தலைமையில் கற்பிட்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .


மேற்படி வேலைத்திட்டம் பற்றிய தெளிவூட்டலை  கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் றஞ்ஞன யூ.கே பியதாச வழங்கியதுடன் இதற்கான நிதி மற்றும் முகாமைத்துவ சேவைகள் யூ.என்.டி.பீ ( UNDP) நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும் எனவும் இவ் வேலைத்திட்டம் பற்றி மக்களுக்கு முழுமையான தெளிவூட்டல்கள் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய ஊடகங்கள் வாயிலாக  தெளிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளாதாக விரிவுரையாளர் தெரிவித்தார்.


இத்திட்டத்தை   அடுத்த மாதம் அளவில் நடைமுறைப் படுத்துவதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் அதற்குரிய தகவல்கள் திரட்டும் செயற்பாடுகளுக்கு இப்பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முழுமையான ஒத்துழைப்புக்களையும்  எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.









No comments

note