அக்கரைப்பற்று உதவி மையத்தினால் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு நிதி அன்பளிப்பு!.
அக்கரைப்பற்று உதவி மையத்தினால் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு நிதி இன்று (05) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று உதவி மைய அமைப்பின் தலைவரான ஜமால் முஹம்மத் ரஸ்மி, அதன் செயலாளரான எம்.ஏ.எம். சர்ஜுன் ஆகியோர் இணைந்து பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மேல் மாடி மின் இணைப்பு பணிக்காக 50,000/= ரூபா நிதி அன்பளிப்பை வழங்கி பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தெரிவித்தார்.
இந்நிதி அன்பளிப்பு செய்த அமைப்புக்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பழைய மாணவியர் சங்கம் சார்பில் நன்றியை தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் உபஅதிபர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments