Breaking News

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் 18 வயதுக்குட்பட்ட கால்ப்பந்தாட்ட அணியினர் சம்பியனாகியுள்ளனர்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வலய மட்ட கால்ப்பந்தாட்ட போட்டிகளில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் 18 வயதுக்குட்பட்ட கால்ப்பந்தாட்ட அணியினர் சம்பியனாகியுள்ளனர்.


போட்டி தொடரின் இறுதிப்போட்டியில் புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை அணியை  எதிர்த்தாடிய சாஹிரா அணியினர் 01: 00 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று  மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


சாஹிரா அணிக்காக அவ் அணியின் வீரர் முஹம்மது சக்கீ கோலினை பெற்றுக்கொடுத்தார்.


இம்மாணவர்களுக்கும், பொறுப்பாசிரியராக கடமையாற்றிய எம்.ரினூஸ் அவர்களுக்கும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் ஆகிய அனைவருக்கும் கல்லூரி அதிபர் ஐ.ஏ.நஜீம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துள்ளார்.




No comments

note