நுரைச்சோலை பாடசாலையில் "தெனும் மினும்" போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) மாணவர்களின் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற “தெனும் மினும்” மாணவர்களின் அறிவாற்றலை அளவிடும் போட்டியில் வெற்றிகளை பதிவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (05) புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் தலைமையில் பாடசாலை காலைக்கூட்டத்தின் போது இடம்பெற்றது.
அத்தோடு, 2023 ல் வலய மட்ட தமிழ் மொழித்தின போட்டியில் பங்குபற்றி முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் இதன் போது பாராட்டப்பட்டனர்.
No comments