அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகர கிளை உறுப்பினர்கள் அஷ்ஷெய்க் அப்துல் நாசர் (ரஹ்மானி) சந்திப்பு!.
(எம்.யூ.எம்.சனூன்,கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை புத்தளம் நகர கிளையின் உறுப்பினர்கள் அனைவரும் அதன் தலைவர் ஏ.பீ.ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) தலைமையில் (02) ஞாயிற்றுக்கிழமை புத்தளம் அப்துல் மஜீத் எகடமி தலைவரும், முன்னாள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச்செயலாளருமாகிய அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி) அவர்களை அவரது புத்தளம் அப்துல் மஜீத் எகடமி சென்று சிநேக பூர்வமான சந்திப்பை மேற்கொண்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை புத்தளம் நகர கிளையின் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அப்துல் நாசர் (ரஹ்மானி),
ஜம்இய்யாவின் முக்கியத்துவம், ஜம்இய்யாவினால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் எவை, உலமாக்களின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை மிக கண்ணியமான முறையில் தெளிவு படுத்தினார்கள்.
No comments