Breaking News

புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளராக (காணி) சதுரக ஜயசிங்க நியமனம்...!

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளராக (காணி) நியமிக்கப்பட்ட சதுரக ஜயசிங்க, தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


பொதுநிர்வாக, உல்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


இவ்வாறு புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட சதுரக ஜயசிங்க, சர்வமத தலைவர்களின் ஆசியுடன் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள் , சமயத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 


கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்துகொண்ட இவர், தேசிய மரபுரிமைகள் அமைச்சின் உதவிச் செயலாளராக தனது முதல் நியமனத்தை பெற்றுக் கொண்டார்.


அதனையடுத்து, கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராகவும், வன்னாத்தவில்லு, நாத்தாண்டிய ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன், இலங்கை நிர்வாக சேவையில் 13 வருடங்கள் நிறைவான அனுபவமுள்ள ஒருவராகவும் காணப்படுகின்றார்.


வில்பொத அனுர மகா வித்தியாலயம், சிலாபம் சாந்த மரியா வித்தியாலயம் மற்றும் சிலாபம் ஆனந்த வித்தியாலயம் என்பனவற்றின் பழைய மாணவரான இவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கணித பிரிவு பட்டதாரியாவார்.


அத்துடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிராந்திய அபிவிருத்தி தொடர்பில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

note