தாராக்குடிவில்லு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பா.உ அலி சப்ரி ரஹீம்.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
"அறிவால் உலகை ஆள்வோம், அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு" எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த (30) வியாழக்கிழமை தாராக்குடி வில்லு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கலந்து கொண்டார்.
பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் ரபாய்தீன், பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவர் ரிஸ்வி, பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் அன்சார்தீன் ஹாஜியார், அக்கரவெளி ஜும்ஆ பள்ளி தலைவர் யூனுஸ் ஹாஜியார், தாராவில்லு ஜும்ஆ பள்ளி உப தலைவர் சியாத், தாராக்குடி வில்லு இணைப்பாளர் ஜெனீர், புளிச்சாகுளம் இணைப்பாளர் மர்சூன், பத்துலு ஓய இணைப்பாளர் சியாம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பிரத்தியேக செயலாளர் ஜமால்தீன் ஜவ்ஸி எச். அமீர் அலி ஆசிரியர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
No comments