Breaking News

நற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பின் மாபெரும் இரத்ததான முகாம்

பாறுக் ஷிஹான்

நற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பின் பூர்வாங்க சேவையாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய  உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் நற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பின்  தலைவர் அப்துல்லாஹ் முகமட் சாஜித்  தலைமையில்   நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலய ஆரம்ப பிரிவில் இன்று இடம்பெற்றது.


உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என்பதற்கமைவாக நற்பிட்டிமுனையில் சில வருடங்களாக இயங்கிவரும் நற்பிட்டிமுனை Unity சமூக சேவை  அமைப்பானது திடீர் விபத்துக்கள்,சத்திர சிகிச்சைகளுக்கான அவரச தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.


காலை முதல் மாலை வரை அமைப்பின் செயலாளர்  அமானுல்லாஹ் முகமட் சாகீர் நெறிப்படுத்தலில் , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவ அதிகாரி வைத்தியர் கிருஸ்ணமூர்த்தி வித்தியா ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள்,சமூக அமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கு கொண்டனர்.










No comments

note