புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்.
(புத்தளம் எம்.யூ.எம். சனூன்,கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புத்தளம் தள வைத்திய சாலையை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துதல் மற்றும் அங்கு காணப்படுகின்ற குறைபாடுகளை முழுமையாக நிவர்த்தி செய்தல் போன்ற விடயங்களுக்கான கலந்துரையாடல் (29) வடமேல் மாகாண ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் சிந்தக அமல் மாயாதுன்ன ஆகியோர் உத்தியோகபூர்வமாக கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் மிக முக்கியமாக இலங்கையின் பல வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 400 மில்லியன் ரூபாவை புத்தளம் வைத்தியசாலைக்கு ஒதுக்கீடு செய்வதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன.
அத்துடன் வைத்திய சாலையில் குறைபாடாக உள்ள அனைத்து வேலை திட்டங்களையும் நிவர்த்தி செய்வது தொடர்பான விடயங்களும் பற்றியும் பேசப்பட்டன.
ஆளுநர் அவர்கள் புத்தளத்தின் வைத்தியசாலைக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு வைத்தியசாலையின் தரம் தொடர்பாகவும் அதனை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் ஆராயும்படி பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வேண்டிக்கொண்டார்.
இந்நிகழ்வில் புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு மற்றும் வைத்தியர்களும் கலந்து கொண்டனர்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் எச். அமீர் அலியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
No comments