JobVibe.lk - Sri Lanka Job Portal

தெமட்டகொடைய சேர்ந்த எம்.என்.எம். ரோஸன் (BSW. Hons) அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்.

இலக்கம் 15, வேலுவன வீதி, தெமட்டகொடை, கொழும்பு 09, எனும்  முகவரியை வசிப்பிடமாகவும், அறக்கியாளை கிராமத்தை பிறப்பிடமாகவும் கொண்ட மொஹமட் நஸார் மொஹமட் ரோஸன் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அகில இலங்கை  சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் 28.05.2024 மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்திம எதிரிமான முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.


இவர் தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்களத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி ஆவார். அத்துடன் வக்பு நியாய சபையின் பதில் செயலாளராகவும் கடமை ஆற்றுகிறார்.


இவர் சமூகப்பணி இளமானிப் விஷேட பட்டத்தை (Bachelor of Social Work (Hons) - BSW) தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (NISD) மூலம் பெற்ற ஒரு பட்டதாரி ஆவார். இவர் தனது பாடசாலைக் கல்வியை கிரி/அறக்கியாளை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், கிரி/ கெகுணகொல்லை தேசிய பாடசாலையிலும் பெற்றவர்.

 

அல்ஹாஜ் S.L.M. நஸார் , ஹாஜியானி M.S.D. ஹைரியா தம்பதிகளின் மகனான M.N.M. ரோஸன் சமூக சேவைகளில் சிறு வயது முதல் ஆர்வம் காட்டிவரும் இளம் சமூக ஆர்வலருமாவார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال