இந்திய உயர்ஸ்தானியர் சந்தோஷ் ஜா ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் .
நூருல் ஹுதா உமர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் அவர்களின் விசேட அழைப்பின் பேரில் இந்திய உயர்ஸ்தானியர் சந்தோஷ் ஜா இன்று (01) ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
ஒலுவில் துறைமுக விஜயத்தின் பின்னர் அம்பாறை மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சீ.ரியாஸ் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்,முன்னாள் பாாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஜே.பீ, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய இணைப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் நஜீயா சாபீர், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான ஏ.சீ.சமால்டீன், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், மீனவ சங்கங்களின் தலைவர்கள், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் நிந்தவூர் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments