JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் ஹஜ் பெருநாள் ரேஸ் நடாத்துவதற்கு கே.ஆர்.சீ அமைப்பு உருவாக்கம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)


கற்பிட்டி நகரில் ஆரம்ப காலங்களில் தொடராக முஸ்லிம்களின் பெருநாட்களை சிறப்பிக்கும் முகமாக கற்பிட்டி புதுக்குடியிருப்பு தேத்தாவாடி கிராமத்தில் அமைந்துள்ள ரேஸ் தரவையில் இடம்பெற்று வந்த பாரம்பரிய பெருநாள் விளையாட்டுக்களுடன் மாபெரும் மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டி நிகழ்வுகள் கடந்த சில வருடங்களாக நடைபெறவில்லை.   


இதனை கருத்தில் கொண்டு கற்பிட்டியின் னபாரம்பரியத்தை நிலைநாட்டும் நோக்கோடு கற்பிட்டி ரேஸ் குழு (கே.ஆர்.சீ) அமைப்பு ஒன்றை உருவாக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (03) இரவு கற்பிட்டி ஸ்மாட் கல்லூரியில் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜே.எம் தாரீக் தலைமையில் இடம்பெற்றது. 


இதன்போது எதிர்வரும் ஹஜ் பெருநாளைக்கு அடுத்த தினம் கற்பிட்டி தேத்தாவாடியில் உள்ள ரேஸ் தரவையில் கற்பிட்டியின் பாரம்பரிய பெருநாள் விளையாட்டுக்களுடன் மாபெரும் மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டிகளை நடாத்துவதற்க்கு தீர்மானம் மேற்கொள்ளப்படதுடனா இதில் வெற்றி பெரும் வெற்றியாளர்களுக்கு  பெறுமதியான பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்க பணம் என்பன வழங்கப்பட வேண்டும் எனவும் இதனை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு கற்பிட்டி மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வதற்கும்  தீர்மானம் மேற்க்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال