Breaking News

உடப்பு, ஆண்டிமுனை கிராமத்திற்கான நீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

உடப்பு ஆண்டிமுனை கிராமத்திற்கான நீர் வழங்கல் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 2024/05/13 ம் திகதி திங்கட்கிழமை முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் றியாஸ் தலைமையில் நடைபெற்றது 


ஆண்டிமுனை சனத் நிசாந்த பவுண்டேஷன் அமைப்பின் தலைவர்  எம்.சஹாதேவனின் வேண்டுகோளின் பெயரில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் றியாஸின் மேற்பார்வையின் கீழ் காலஞ்சென்ற முன்னாள் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேராவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெற்ற உடப்பு ஆண்டிமுனை கிராமத்திற்கான நீர் வழங்கல் திட்டம் அங்குரார்ப்பண செய்து வைக்கப்பட்டது.


இதில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சின்தக மாயாதுன்னேவின் பங்குபற்றுதலுடன்  சனத் நிசாந்த பெரேராவின் பாரியாரும் சட்டத்தரணியுமான சாமரி பிரியங்காவின் திருக்கரங்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.









No comments

note