Breaking News

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசிக்கு புத்தளத்தில் அனுதாப கையொப்பம் இடும் நிகழ்வு

(புத்தளம் எம்.யூ.எம் சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களை புத்தளத்தில் வாழுகின்ற மக்களும் தெரிவித்து வருகின்றனர்.

 

புத்தளம் கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்ற அனுதாப கையொப்பங்களை பெறுகின்ற செயல்திட்டம் இன்று(24) காலை 06 மணி முதல்  புத்தளம் நுஹ்மான் திருமண மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.


இன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இதில் கையொப்பங்களை இட முடியும்.

 

இன்று மாலை வரை பெறப்படுகின்ற இந்த கையொப்பங்களை இலங்கையில் உள்ள ஈரான் தூதுவர் ஆலயத்தின்  ஊடாக ஈரான் நாட்டின் பதில் ஜனாதியின் அலுவலகத்திற்கு பாரப்படுத்தப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


ஈரான் இஸ்லாமிய குடியரசு இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கும் அது போன்று நலிவுற்ற மக்களுக்கான நல நலன்  திட்டங்களுக்கும் தொடர்ந்து உதவி வரும்  ஒரு நாடு என்பதினால் இந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புத்தளம் கலாச்சார அமைப்பு தெரிவித்துள்ளது.






No comments