Breaking News

கற்பிட்டியில் இடம்பெற்ற இரசாயனமற்ற ஊட்டச்சத்து உணவு பற்றிய செயலமர்வு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊட்டச்சத்து உணவுக்கான பல் துறை செயற்திட்டம் சம்மந்தமான செயலமர்வு இன்று கற்பிட்டி பிரதேச செயலாளர் சமில இந்திக ஜயசிங்க தலைமையில் புத்தளம் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் ஏற்பாட்டில் இன்று ( 09) கற்பிட்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.


இரசாயன ஊட்டச்சத்து இல்லாமல் போஷாக்கான உணவுத் திட்டமிடலை மேற்கொள்ளல் என்ற தொனிப்பொருளில் இரசாயன உரப்பாவனை மற்றும் கிருமிநாசினிகளின்பாவனைகள் என்பவற்றை தவிர்த்து சுகாதாரமான  இடம்பெற்ற இச் செயலமர்வினை புத்தளம் மாவட்ட திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் கீத் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மதுவந்தி மற்றும் கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி தர்மசிறி ஆகியோர் வழிநடாத்தினர் .


இதில்  அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், கற்பிட்டி பிரதேச சபையின் வெளிக்கள ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், கற்பிட்டி கோட்டக் கல்வி பணிமனை ஊழியர்கள், வெளிக்கள நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அரச ஊழியர்கள், சமூக சேவை தொண்டு நிறுவன தொண்டர்கள் மற்றும் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் என பலரும் கலந்து கொணடதுடன் இச் செயலமர்விற்கான நிதி உதவியினை சர்வோதய அமைப்பு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.







No comments

note