ஆளுநர் மாளிகையில் சேவை நாடிகளுடன் அலி சப்ரி ரஹீம் எம்.பீ.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
குருநாகல் ஆளுநர் மாளிகையில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பல சேவை நாடிகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வடமேல் மாகாண ஆளுநர் அஹமத் நசீர் அவர்களுடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக் கொடுத்தார்.
இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.ஜௌசியும் கலந்து கொண்டார்.
பாடசாலை ஆசிரியர்களின் இடம் மாற்றங்கள், அதிபர் சேவைகள் தொடர்பான பிரச்சினைகள், புதிய பட்டதாரி ஆசிரியர்களின் நியமனங்கள் உள்ளிட்ட போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஏ.எச்.எம். பைரூஸ், சமூகவியலாளர், அதிபர் எஸ்.ஆர்.எம்.முஹுசி, அதிபர் அஷ்ஷெய்க் சன்ஹீர் (கபூரி), புத்தளம் வலய கல்வி பணிமனையின் சித்திரப்பாட ஆசிரிய ஆலோசகர் கலாநிதி எம்.எம்.முஹம்மது உள்ளிட்ட கல்வியியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments