புத்தளம் பாத்திமா கல்லூரி மாணவிகளுக்கான செயலமர்வு.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள் (30) இலங்கை மற்றும் மாலைத்தீவில் உள்ள The Makers & European Union உடன் புத்தளத்தில் MakHer இனால் நடத்தப்பட்ட ஒருநாள் STEM செயலமர்வில் கலந்து கொண்டனர்.
கல்லூரியில் பயிலும் 09 ம் வகுப்பு மாணவர்களுக்காக STEM நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதால், இது கல்லூரிக்கு கிடைக்கப்பெற்ற சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
அதிபர் சரீனா பர்வீன் அஜ்மல் தலைமையில், உதவி அதிபர் இல்ஹானா வாரிஸின் வழிகாட்டுதலிலும், சனோபர் ஆசாதின் ஒருங்கிணைப்பிலும், கல்லூரி ஆசிரியைகளும், மாணவிகளும் இந்த அரிய வாய்ப்பைப் பெற்றனர்.
இந்த செயலமர்வானது, எதிர்காலத்தில் STEM துறைகளில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்களை கொண்ட பெண்களை உருவாக்குவதற்கு வழிவகுத்தது.
No comments