2022 சாதாரண தர (O/L) பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வௌியாகின
(எம்.எச்.எம்.எஸ் மற்றும் எம்.யூ.எம் எஸ்)
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.
மீள் மதிப்பீட்டுக்காக 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும், 250,311 விடைத்தாள்கள் மீள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
No comments