பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலைக்கு பிளாஸ்டிக் கதிரைகளும், மின்விசிறியும் அன்பளிப்பு!.
புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலைக்கு 50 பிளாஸ்டிக் கதிரைகளும், மின்விசிறியும் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனை பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.நஜீப் அவர்களிடம் பிரதி அதிபர் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஆசிரியர் எம்.வை.எம். ஹுதைபாவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments