சம்மாந்துறையில் ரஹ்மத் பவுண்டேசனால் றமழான் அன்பளிப்பு
(அஸ்லம் எஸ்.மெளலானா)
புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பானது அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நோன்பு திறக்கும் இப்தார் ஏற்பாடுகளையும் மனிதாபிமான உதவிகளையும் முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம்.நிலுபா மற்றும் எஸ்.நளீம் ஆகியோர் மூலம் சம்மாந்துறையின் சில கிராமங்களில் அடையாளப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு சனிக்கிழமை (06) இந்த அமைப்பினால் பேரீச்சம்பழப் பொதிகள் வழங்கி வைப்பட்டுள்ளன.
பவுண்டேசன் ஸ்தாபகரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களுடன் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை மத்திய குழுச் செயலாளரும் திடீர் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தருமான ஏ.எஸ்.எம். அஸாருதீன் உட்பட நலன் விரும்பிகள், பயானாளிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments