Breaking News

பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து கௌரவிப்பு.

ACUMEN International நடாத்திய English Elocution பரீட்சையில் சித்தியடைந்த நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பதக்கங்கள் அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.


அகில இலங்கை ரீதியில் சுமார் 300 மாணவர்கள் பங்கு பற்றியதில் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை சுமார் 40 மாணவர்கள் 100 புள்ளிகளைப் பெற்றிருந்தனர். இம்மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் அவர்களின் வழிகாட்டலில் ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியர் திருமதி மர்சூக்கா இம்மாணவர்களைப் பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.












No comments

note