பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் CCTV பாதுகாப்பு கெமராக்கள் திறந்து வைப்பு!
புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் பொறுத்தப்பட்டிருக்கும் (CCTV வலையமைப்பு) பாதுகாப்பு கெமராக்கள் கடந்த (06) திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலை பழைய மாணவரும், Kinglux (PVT) Ltd. உரிமையாளருமான ஏ.ஆர்.எம். இம்ரான்கான் சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்பு கெமராக்களை வழங்கி உத்தியோகபூர்வமாக தனது கரங்களால் ரிபன் வெட்டி திறந்து வைத்தார். இதேவேளை இம்ரான்கான் பாடசாலையின் பிரதான நுழைவாயிலை அமைத்து கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் - மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவருமான ஏ.எச்.எம். ஹாரூன், கல்வி அபிவிருத்திக் குழு செயலாளர் சீ.எம்.எம். தாவூத், பழை மாணவர் சங்க செயலாளர் ஜே.எம். ஜெஸீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அதிதிகள் பூமாலையிட்டு, பாடசாலை பேண்ட் வாத்தியக் குழுவுடன் அழைத்து வரும் போது மாணவர்களால் பூமலர் தூவி வரவேற்க்கப்பட்டார்கள்.
பாடசாலை TPS மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவரின் சேவையை பாராட்டி அதிபர் அதிதிகளால் இம்ரான்கான் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதேவேளை பாடசாலைக்கு சுத்தமான குடிநீர் (R/O Plant) வசதியை அமைத்துத் தருவதாகவும், தரமான Multi Media Projector ஒன்றை பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதியளித்ததாக அதிபர் தெரிவித்தார்.
KMCC (NS) MEDIA UNIT
No comments