கடையாமோட்டை அஷ் - ஷம்ஸ் நலன் புரிச் சங்கத்திடம் பேரீத்தம் பழங்கள் வழங்கி வைப்பு!.
கடையாமோட்டை அஷ் - ஷம்ஸ் நலன் புரிச் சங்கத்திடம் பேரீத்தம் பழங்கள் நேற்று (30) வழங்கி வைக்கப்பட்டுள்ள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் மூலம் கிடைக்கப்பெற்ற பேரீத்தம் பழங்களின் ஒரு தொகுதியை கடையாமோட்டை கிராமத்தில் பல புரட்சிகரமான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் அஷ் - ஷம்ஸ் நலன் புரிச் சங்கத்திடம் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார் வழங்கி வைத்தார்.
குறித்த சங்கமானது இப்பிராந்தியத்தில் வருமைக் கோட்டின் கீழ் வாழக்கூடிய குடும்பங்களை அடையாலங்கண்டு பல உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ்வமைப்பின் நீண்ட நாள் கனவான கடையாமோட்டைக்கென ஜனாஸா வாகனமொன்றை கொள்வனவு செய்வது இவர்களது இலக்காகவும் காணப்படுகின்றது.
No comments