Breaking News

கற்பிட்டி அல் அக்ஸாவின் பழைய மாணவர் சங்க கூட்டத்தில் பதற்றம்

(கற்பிட்டி - சியாஜ் )                                                                                              கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவ மற்றும் மாணவிகள் சங்கத்தின் அங்குரார்பணக் கூட்டம் பாடசாலையின் அதிபர் முஸ்தபா அன்சார் தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பல்வேறு பட்ட கருத்து முரண்பாடுகள் குழப்பங்களுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது. 


அதிபரின் தலைமை உரையை  அடுத்து பழைய மாணவர் சார்பாக கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவரினால் மேற்படி கூட்டத்திற்கு அதிபரான தாங்கள் அழைப்பு கடிதத்தில் கையொப்பம் இடாது ஆறு மாதத்திற்கு முன்பே காலாவாதியான பழைய மாணவர் சங்கத்தின் இணை செயலாளர் கையொப்பம் இட்டு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தமை பற்றிய தெளிவை சபையோருக்கு விளக்கமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்பட்டது . இதன் போது அதிபர் கேள்விக்கு பதிலலிக்காமல் கூட்டத்தை தொடர்வதற்கு முயற்சித்ததை அடுத்து கூட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் மற்றும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அதிபர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். சுமார் ஒரு மணி நேரகாலம் நீடித்த மேற்படி அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் முகமாக கற்பிட்டியில் உள்ள கல்விமான்கள் ஏனைய பாடசாலை அதிபர்கள் அரசியல்வாதிகள் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் என பலரும் முயற்சி செய்து சபையோரை சுமுகமான நிலைக்கு கொண்டுவந்ததுடன் தற்போதைய அதிபர் பாடசாலையில் இருந்து செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகைமையான தரம்  01 அதிபர் ஒருவரை இப் பாடசாலைக்கு கொணடு வருவதற்கான முழு முயற்சிகளும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக இடம்பெற்று வருவதாக கற்பிட்டி பிரதேச சபையின் முன்னால் எதிர்கட்சி தலைவர் ஏ.ஜே.எம்.தாரிக் மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் சிலராலும் சபையோருக்கு உறுதியளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சுமுகமான நிலை ஏற்பட்டது.  


தொடர்ந்து கூட்டம் தற்போதைய அதிபர் தலைமையில் நடைபெற வேண்டும் என்ற சுற்று நிருபம் மற்றும் இப் பழைய மாணவ மற்றும் மாணவிகள் சங்கத்தின் நோக்கம் பற்றிய தெளிவை கற்பிட்டி கோட்டக்கல்வி பணிமனையின் ஆசிரியர் ஆலோசகர் பலீல் சபையோருக்கு தெளிவு படுத்தி மீண்டும் கூட்டத்திற்கு அதிபரை அழைத்து வந்து கூட்டத்தை வழிநடாத்தினார்.


தொடர்ந்து புதிய நிர்வாகத் தெரிவு ஆரம்பிக்கப்பட்டது

அதன்படி தலைவராக அதிபர் முஸ்தபா அன்சார் பதவிவழியாக தெரிவானார்.

செயலாளர் தெரிவிற்கு மூன்று நபர்களின் பிரேரணைகள் முன்மொழியப்பட்டது. அத் தெரிவு இரகசிய வாக்கெடுப்புக்கு விடப்பட்டது அதில் அதி கூடிய வாக்குகள் பெற்ற எம்.பீ.எம் அர்ஷத்(கிராம உத்தியோகத்தர்)செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். 

பொருளாளர் எம்.ஐ.எம் றூமி(உதவி அளவையாளர்) , 

உப தலைவர் எம்.எஸ்.எம் ஹிஸ்மி(ஆசிரியர்)

இணைச்செயலாளர்

எம்.ஜீ.எம்.மொஹமட் ஹிஷான்(ஆசிரிய ஆலோசகர்)

இணைப்பொருளாளர்

எஸ்.இஸட்.மொஹமட் கப்லி(தொழிலதிபர்)

மேலும் ஏழு பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

எம்.எப்.பாத்திமா பர்வின்(கிராம உத்தியோகத்தர்) , 

மொஹமட் அர்ஷாத்(வர்த்தகர்) , 

ஏ.ஜே.பாத்திமா றிப்கா(நிதி முகாமையாளர்) , 

மொஹமட் லத்தீப்(தொழிலதிபர்), 

கலைச் செல்வி(சமூக செயற்பாட்டாளர்) , மொஹமட் றிஹான்(அபிவிருத்தி உத்தியோகத்தர்) , 

மொஹமட் முஸம்மில்(NHDA)

கணக்காய்வாளராக வி. ஜேசுதாஷன் தெரிவானார்.








No comments

note