Breaking News

கோலாகலமாக இடம்பெற்ற பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

புத்தளம் - தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி கடந்த 06ம், 07ம் திகதிகளில் “ஒற்றுமையே எம் பலம்" எனும் தொனிப் பொருளில் பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். மிஹ்ழார் (நளீமி) தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர அவர்களும் விஷேட அதிதியாக புத்தளம் தெற்குக் கோட்ட முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெற்ற திரு. ஆர்.பீ. நிமல்சிறி அவர்களும் கௌரவ அதிதிகளாக திரு. பாலித்த தயானந்த (ஆசிரிய ஆலோசகர்) , திரு ஏ. ஜீ. ஆரிப் (ஆசிரிய ஆலோசகர் புத்தளம் - தெற்கு) மற்றும் அயல் கிராம பாடசாலை  அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.


இவ்வில்ல விளையாட்டுப் போட்டியில் நடப்பு ஆண்டின் (2024) சம்பியனாக வீனஸ் இல்லமும் இரண்டாவது இடத்தை மார்ஸ் இல்லமும் மூன்றாம் இடத்தை யுரேனஸ் இல்லமும் பெற்றுக்கொண்டது.


சமீரகம பாடசாலையின் வரலாற்றில்  முதற்தடவையாக கோலாகலமாக இடம்பெற்ற இவ்விளையாட்டுப் போட்டி கல்வி அதிகாரிகளினதும் அதிதிகளினதும் பெற்றோர்களினதும் பார்வையாளர்களினதும் பாராட்டை பெற்றது.


இந்நிகழ்வினை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அதிதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை முகாமைத்துவக்குழு,  விளையாட்டு பொறுப்பாசிரியர்,விளையாட்டு குழு,ஆசிரியர் குழாம், மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், கல்வி மேம்பாட்டுக் குழுவினர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகியோருக்கு அதிபர் தனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.












No comments

note