Breaking News

கற்பிட்டி அல் அக்ஸாவின் பழைய மாணவர் கூட்டம்

(கற்பிட்டி - சியாஜ்)

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான பொதுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிறு (2024/03/24) காலை 09 மணிக்கு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் காலாவதியாகி ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பழைய மாணவர் சங்கத்தின் பதவி நிலை தலைவரான அதிபர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காது காலாவதியான அதிகாரப்பூர்வமற்ற சங்கத்தின் இணைப்பு செயலாளரினால் மேற்படி கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 2024 ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையினை பெற்றோருக்கான பொதுக் கூட்டத்தை கூட்டி  சமர்ப்பிக்காமலும் அதற்கான அனுமதி பெறாமலும் நோன்பு விடுமுறைக்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே பாடசாலைக்கு சமூகமலிக்காமலும் பாடசாலை விடுமுறை வழங்கப்பட்ட பின் பாடசாலைக்கு வந்து செல்லும் செயற்பாட்டினை தற்போதைய பாடசாலையின் அதிபர் முஸ்தபா அன்சார் செய்து வருகின்றார்.


அத்தோடு பாடசாலையில் இடம்பெற்ற தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் நிகழ்வு தரம் ஆறிற்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் நிகழ்வு மற்றும் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு போன்ற முக்கிய நிகழ்வுகள் எதிலும் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





No comments