பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் இடம்பெற்ற 2023 ம் கல்வி ஆண்டிற்கான பரிசளிப்பு விழா!.
புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் தரம் ஆறு தொடக்கம் பதினொன்று வரை மாணவர்களுக்கான 2023 ஆம் கல்வி ஆண்டின் பரிசளிப்பு விழா இன்று (01) பாடசாலையின் TPS மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடாசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவருமான ஏ.எச்.எம். ஹாரூன் விஷேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு, இதன்போது முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளை பெற்ற மாணவர்களுக்கு விஷேட அதிதி மற்றும் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்களால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(KMCC MEDIA UNIT)
No comments