புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் புதிய பிரதி அதிபராக எஸ்.ஆர். எம்.எம். முஹ்ஸி நியமனம்!.
புத்தளம் தெற்கு கோட்டத்திக்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் புதிய பிரதி அதிபராக எஸ் ஆர்.எம்.எம். முஹ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பிரதி அதிபர் இன்று (19) நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் இந்நியமனத்துக்கு முன்னர் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் பிரதி அதிபராக கடமை புரிந்தார்.
புதிய பிரதி அதிபரை பாடசாலையின் அதிபர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
சமூக ஆர்வலரும், ஊடகவியலாளருமான பிரதி அதிபர் எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி அவர்களை மதுரங்குளி மீடியா சார்பில் வாழ்த்துக் கூறி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
"உங்கள் பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்"
No comments