பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நாள் நிகழ்வு!
பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நாள் நிகழ்வாக மரதன் ஓட்டப் போட்டி கடந்த 21 ஆம் திகதி பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் இடம்பெற்றது.
இப்போட்டியில் கமர், நஜ்ம், ஸம்ஸ் ஆகிய மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு ஒரு இல்லத்திலிருந்து 10 மாணவர்கள் வீதம் மூன்று இல்லத்திலிருந்தும் 30 மாணவர்கள் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கு கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார் கலந்து கொண்டு அதிபருடன் இணைந்து ஆரம்பித்து வைத்தார். இதன்போது பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இம்மரதன் ஓட்டப் போட்டியில் கமர் இல்லத்தைச் சேர்ந்த சஹ்லான் முதலாம் இடத்தையும், நஜ்ம் இல்லத்தைச் சேர்ந்த ஜப்ரான் இரண்டாம் இடத்தையும், ஸம்ஸ் இல்லத்தைச் சேர்ந்த மின்ஹாஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
No comments