Breaking News

தேசபந்துவுக்கு எதிராக முஜிபுர் ரஹ்மான் உயர் நீதிமன்றத்தில் மனு

பதில் பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதில் பொலீஸ் மாஅதிபர் பதவிக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


இவரை பதில் பொலீஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க வழங்கியுள்ள சிபாரிசுக்கு எதிராக தடைத்தரவு பிறப்பிக்குமாறும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தடுக்க முயற்சிக்காமை

அரகலய நடத்திய பொதுமக்களை பாதுகாக்க முயற்சி எடுக்காமை


போன்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இவருக்கு  தண்டனை வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதால் இவருக்கான பொலீஸ்மா அதிபர் நியமனத்திற்கு எதிராக தடையுத்தரவு வழங்குமாறு இவர் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




No comments

note