பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் - சமிந்த விஜேசிரி
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இராஜினாமா செய்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை நிகழ்த்திய அவர் இவ்விடயத்தை பாராளுமன்றத்தில் அறிவித்ததுடன் தனது இராஜினாமாக் கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தனக்கு ஒரு தகப்பன் போன்று ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்த அவர் மக்கள் விரும்புகின்ற ஆட்சி ஒன்றை அமைக்க பொது மக்களுக்கு அவகாசம் வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
No comments