Breaking News

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணணி தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை ஆரம்பம்!

நூருல் ஹுதா உமர் 

முதன்முறையாக தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணணி தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு விஞ்ஞான பீட பிரதான விரிவுரை மண்டபத்தில் 2024.01.20 ஆம் திகதி கற்கை நெறியின் இணைப்பாளரும் கணணி விஞ்ஞான துறையின் தலைவருமான பேராசிரியர் எச்.எம்.எம்.நளீர் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வின் கௌரவ அதிதியாக பீடாதிபதி கலாநிதி எம்.எச்.ஹாறுன் கலந்து கொண்டதுடன் சிரேஷ்ட விரிவுரையாளர்களான ஏ.எல்.அனீஸ் மற்று கலாநிதி எம்.ஏ.சி.அக்மல் ஜஹான் ஆகியோர் விஷேட அதிகளாக கலந்து கொண்டனர்.


 நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக பிரதி பதிவாளர் எம்.எஸ்.எம். இம்தியாஸ் செயற்பட்டார்.







No comments

note