புத்தளம் காஸிமியா அரபுக் கல்லூரியிலிருந்து மதீனா பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியிலிருந்து இவ்வருடம் மதீனா பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 8 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று (14) காலை 10:30 மணிக்கு காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் மஹ்மூத் ஹஸ்ரத் மண்டபத்தில் காஸிமிய்யா பழைய மாணவர் அமைப்பினால் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வுக்கு காஸிமிய்யாவின் கௌரவத்துக்குரிய அதிபர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் காஸிமிய்யாவின் நம்பிக்கையாளர் சபை கௌரவத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஆர்.எம். முஸம்மில் மற்றும் அதன் செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷேக் எம்.எச்.எம். பஸ்லுர் ரஹ்மான் நளீமி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு காஸிமிய்யாவின் முன்னாள் இந்நாள் கௌரவத்திற்குரிய உஸ்தாத்மார்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள், கல்விமான்கள், கல்லூரிகளின் அதிபர்கள், அரசியல்வாதிகள், ஊர் பிரமுகர்கள், அபிமானிகள் மற்றும் மத்ரசாவின் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மதினா பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களுக்கு வருகை தந்த அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காஸிமிய்யாவின் முதல்வர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், காஸிமிய்யாவின் நம்பிக்கையாளர் சபை செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷேக் எம்.எச்.எம். பஸ்லுர் ரஹ்மான் நளீமி, பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான
அஷ் ஷெய்க் AP. ரிஸ்மி காஸிமி MA, PhD reading (கல்பானுவ), முன்னாள் உஸ்தாத் அஷ்ஷெய்க் MB. ஹிப்ஸுர் ரஹ்மான் (மக்கி) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வை பழைய மாணவர் சங்கத்தின் உபசெயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். முஜாஹித் (காஸிமி, மதனி) அவர்கள் நெறிப்படுத்தினார்கள்.
No comments