Breaking News

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கெதிராக கடற்படைக்கப்பல் - நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் காட்டம்

ஜனாதிபதி 18ம் திகதி அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் செல்கின்றார்.


இந்நிலையில், இந்நாட்டின் அணிசேராக்கொள்கை என்ன? இஸ்ரேலின் தேவைக்காக ஹூதி கிளர்சியாளர்களை ஒழிப்பதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றை அனுப்புவதாக இருந்தால், எதற்காக அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கு எமது அரச தலைவர்கள் செல்கின்றனர் என நேற்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ரவூப் ஹக்கீம் கேள்வி தொடுத்தார்.


பலஸ்தீன காஸாப்பகுதியில் அண்மைய நாட்களில் இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் உலக முஸ்லிம்களை மாத்திரமின்றி, கருணையுள்ளம் கொண்ட ஒவ்வொரு மனிதனையும் உலுக்கியுள்ளதைல் காண முடிகிறது.


இவ்வாறான இஸ்ரேலின் அரக்கத்தனத்தைக் கண்டித்து பலஸ்தீன காஸா விவகாரத்தில் நல்லதொரு முடிவை எதிர்பார்த்து தன்னாலான முயற்சிகளிலும் போராட்டங்களிலும் கலந்து கொள்வது மாத்திரமின்றி, பாராளுமன்றத்திலும் பலஸ்தீன விவகாரம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு காத்திரமாக இ*ஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கெதிரான தனது கண்டனத்தையும் ரவூப் ஹக்கீம் வெளியிட்டு வருகிறார்.


தேசிய ரீதியாக பலஸ்தீன விவகாரம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவும் பலஸ்தீன காஸா மக்களுக்கு விடிவு ஏற்படும் வரை பாராளுமன்றத்திற்குச் செல்லும் போது பலஸ்தீன சால்வையை அணிந்து செல்வேன் எனக்குறிப்பிட்டார். 


சொன்னது மாத்திரமல்ல, பாராளுமன்றத்திற்கு பலஸ்தீன சால்வையை அணிந்து சென்று, பலரையும் பலஸ்தீன காஸா மக்களுக்கு ஆதரவாக பலஸ்தீன சால்வையை அணிய வைத்ததையும் காண முடிந்தது.


கடந்த பாராளுமன்ற அமர்வு முடிவடைத்தும் குறித்த சால்வையை அணிவதை நிறுத்துவார் எனப்பலரும் எதிர்பார்த்த நிலையில், புதிய ஆண்டிற்கான பாராளுமன்றம் ஆரம்பமான போது ரவூப் ஹக்கீம் பலஸ்தீன சால்வையுடன் தோன்றி இஸ்ரேலுக்கு ஆதரவாக இலங்கை கடற்படை கப்பல் அனுப்பப்படுவது தொடர்பாக கேள்வியெழுப்பிய நிகழ்வைப்பார்க்கும் போது ரவூப் ஹக்கீம் பலஸ்தீன விவகாரத்தில் உறுதியான கொள்கையில் இருப்பதைக்காண முடிகிறது.


பலஸ்தீன காஸா விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பார்வையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான ரவூப் ஹக்கீமின் பங்களிப்பு என்பது காத்திரமானதாகப் பார்க்கப்படுகிறது. 


ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைநகர் தெஹ்ரானில் கடந்த சனிக்கிழமை 23ம் திகதி நடைபெற்ற பலஸ்தீனம் தொடர்பான பல் நாட்டு உயர்மட்ட அரசியல் ஆலோசனை மாநாட்டில், ஈரான் நாட்டின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பங்குபற்றினார்.


இதன் போது, பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மிலேச்சத்தமான தாக்குதலைக் கண்டித்தும் நிரந்தரத்தீர்வுக்கான அவசியம் குறித்தும் உரையாற்றியதைப்பார்க்கும் போது ரவூப் ஹக்கீம் பலஸ்தீன விவகாரத்தில் தீவிரமாக அதேநேரம் நேர்மையாகச் செயற்படுவதன் வெளிப்பாடாகவே காண முடிகிறது. 


எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ) 

ஓட்டமாவடி.




No comments