Breaking News

பொருளாதார நெருக்கடியால் தொலைபேசி பாவனை வீழ்ச்சி

இணைய வசதி இணைய பாவனையிலும் வீழ்ச்சி


VAT வரி அதிகரித்தல் உட்பட வருமான வீழ்ச்சி பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்களின் நிரந்தர மற்றும் கைத் தொலைபேசி பாவனை வீழ்ச்சி கண்டுள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வருட ஆரம்பத்துடன் கைத் தொலைபேசி ஒன்றின் விலை கணிசமாக  அதிகரித்துள்ளது. 2022 /2023  காலத்தில் மக்களில் 100 பேர் 146 தொலை பேசிகளை பயன்படுத்தி உள்ளனர் ஆனால் 2023 இறுதிக் கட்டத்தில் 100 பேர் 137 தொலைபேசிகளையே பயன்படுத்தி உள்ளனர்.இது 6.8 வீத வீழ்ச்சியல காட்டுவதாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments

note